ஶ்ரீவில்லிப்புத்தூர் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் சத்திய சீலாவுக்கு நிபந்தனை ஜாமீன்,..

Author: Sudha
27 ஜூலை 2024, 4:02 மணி
Quick Share

கடந்த மே மாதம் 21-ம் தேதி நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ராமர் என்பவர் மரணமடைந்தார்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட ராம்குமார் என்பவரை பெங்களூருவில் போலீஸார் கைதுசெய்தனர்.அப்போது அவருடன் தங்கியிருந்த இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவையும் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, இன்ஸ்பெக்டர் சத்தியசீலாவை சஸ்பெண்ட் செய்தார்.

சத்திய சீலா, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கு பணியாற்றியபோது தொழிலதிபர் ஒருவர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்தார். இதனால் அந்த தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றதால், விசாரணை செய்த சிபிசிஐடி சத்தியஷீலா உட்பட 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்தது. அந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்துகு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ” விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கோவில் திருவிழாவின்போது ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவர் இறந்ததாகவும் போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். இதுதொடர்பாக என் மீதும் புகார் கூறப்பட்டது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சத்திய சீலாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

  • Deputy Mayor Nagaraj துணை மேயர் மீது 5 பிரிவுகளில் வழக்கு… ஆபாச வார்த்தை, சாதியை வைத்து திட்டிய சிபிஎம் பிரமுகர்!
  • Views: - 185

    0

    0