கமல் மாதிரி மோசமான மனுஷன நான் பார்த்ததே இல்ல – போட்டுத்தாக்கிய தாடி பாலாஜி மனைவி!

Author:
27 ஜூலை 2024, 6:12 மணி
Quick Share

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் தாடி பாலாஜி. இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வந்தார்.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக இருந்து மிகப் பெரிய அளவில் பிரபலமானார். இவரது நடிப்பு பயணம் 1997 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் சுகாசினி நடிப்பில் வெளிவந்த “நந்தினி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானார்.

அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானார் தாடி பாலாஜி. ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த தாடி பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கு பெற்று மேலும் பிரபலமானார்.

இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போஷிக்கா என்ற ஒரு மகளும் இருக்கிறார். நித்தியாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு பிரபலமானார். தாடி பாலாஜிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம், கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது உங்களுக்கு உதவி ஏதேனும் செய்தாரா? என்ற கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த அவர்…” கமல்ஹாசன் உதவி செய்தாரா? அவரைப் பற்றி தயவு செய்து இப்பொழுது பேசவே பேசாதீங்க… அப்படி பேசினால் நான் நிறைய கண்டன்ட் வெளியே விட வேண்டி இருக்கும்.

அவரை போல ஒரு மோசமான கேரக்டரை நான் இதுவரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை” என நித்தியா தனது ஆதங்கத்தை கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார். பல வருடத்திற்கு முன் பேசிய இந்த பேட்டி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

  • Samantha சமந்தா விவாகரத்து குறித்து பற்ற வைத்த அமைச்சர்… திடீர் பல்டி : பரபரப்பு பேட்டி!
  • Views: - 132

    0

    0