பைக்கில் சென்ற அதிமுக பிரமுகர் ஓட ஒட விரட்டிப் படுகொலை : பழிக்கு பழியா? கும்பல் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2024, 12:16 pm

கடலூர் திருப்பாப்புலியூர் நவநீதம் நகரை சேர்ந்தவர் பத்மாநாதன்.(47) அதிமுக வார்டு அவைத்தலைவராக இருந்து வருகிறார். திருப்பனாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு இன்று காலை டூவீலரில் வீடு திரும்பிய பாகூர் இருளன் சந்தை அருகே அவரை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமரியாக தாக்கி கொலைசெய்து தப்பிச் சென்றனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் உயிரிழந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

படுகொலை செய்யப்பட்ட பத்மநாபன் மீது கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் மேலும் இவர் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு கேட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்மநாபன் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் அரசியல் காரணமாக படுகொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா இல்லை பாஸ்கர் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையதால் பழிக்கு பழியாக இவரை வெட்டி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 309

    0

    0