மாமியார் வீட்டுக்கு செல்ல அரசுப் பேருந்து; ஆந்திராவில் அடடே சம்பவம்;

Author: Sudha
28 July 2024, 2:56 pm

ஆந்திரப் பிரதேச மாநிலம் நந்தியால் மாவட்டத்தின் ஆத்மகூர் பேருந்து நிலையத்திலிருந்து, அரசுப் பேருந்து திருடப்பட்டதாக காவல்துறையிடம் நிர்வாகம் புகார் அளித்தது.அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறை சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ஒருவர் பேருந்தில் ஏறி பேருந்தை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பேருந்து முச்சுமாரி கிராமத்துக்கு அருகில் பேருந்து காவல்துறை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டது.

வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துர்க்கையா. லாரி டிரைவரான இவர், சரக்குகளுடன் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல நாள்கள் கழித்து வரும் வழக்கமுடையவர். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல லாரியை விட்டு விட்டு, தன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். ஆனால், வீட்டில் அவர் மனைவி இல்லை.

அக்கம் பக்கத்தினர் தாயார் வீடு இருக்கும் முச்சுமரிக்கு அவர் மனைவி சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மனைவியின் கிராமத்துக்குச் செல்ல வாகன வசதி இல்லை என்பதால், ஆத்மகூர் பேருந்து நிலையத்தில், சாவியுடன் இருந்த பேருந்தை எடுத்துக்கொண்டு துர்க்கையா தன் மனைவி இருக்கும் கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மாமியார் வீட்டுக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தை திருடி, ஓட்டிச் சென்ற நபர் குறித்து நெட்டிசன்கள் பலரும் கமென்ட்களைத் தெரிவித்து வருகின்றனர்

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?