கூலி படத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்?.. லோகேஷ் போட்ட பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட பிரபலம்..!

Author: Vignesh
29 July 2024, 2:26 pm

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது, வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்திருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கண்டிப்பாக இந்த படம் மெகா ஹிட் ஆகும் என அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கமலஹாசனுக்கு விக்ரம் என்ற படத்தை மெகா ஹிட் ஆக கொடுத்தது போல் கூலி படத்தையும் லோகேஷ் மெகா ஹிட் படமாக கொடுப்பார் என்று ரசிகர்களும் குஷியில் உள்ளனர். முன்னதாக, லோகேஷ் இயக்கிய படங்களிலே லியோ படம் தான் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், லியோவில் விட்டதை கூலியில் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் லோகேஷ் செயல்பட்டு வருவதாகவும், இதற்கிடையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஷாருக்கான், ரன்பீர் சிங் உள்ளிட்டோரிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதை அடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனாவுடன் பேசியதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்நிலையில், புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் கசிந்து உள்ளது.

அதாவது, கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நாகர்ஜுனா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யாரை வில்லனாக போடலாம் என்ற அடுத்த கட்ட யோசனையில் லோகேஷ் இருக்கிறாராம்.

  • good bad ugly movie collected 200 crores in 9 days ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…