Home Tour வீடியோவுல வேட்டைத் துப்பாக்கி.. சர்ச்சைகளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா அளித்த விளக்கம்..!

Author: Vignesh
29 July 2024, 5:06 pm

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பிரமாதமாக நடித்து வந்தவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித், மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சுஜிதா அண்மையில் Youtube பக்கத்தில் ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், பிரச்சனை எழுந்துள்ளது வீட்டில் துப்பாக்கி இருப்பதை வீடியோவில் காணப்பட்டதால் பலரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தனர்.

sujithadhanush - updatenews360-1

அதாவது, நீலகிரி சுற்றுலா சென்ற போது நண்பர் வீடு மருதமலை அடிவாரத்தில் உள்ளது. அவரது, வீட்டிற்கு சென்றபோது வீடு அழகாக இருந்ததால் ஹோம் டூர் வீடியோ போடலாம் என கேட்டேன் அவரும் ஒப்புக் கொண்டார். அந்த வீட்டில், இரண்டு ‘ஏர் ரைபிள்’ துப்பாக்கிகளை அவர் காட்டியிருந்தார்.

அவற்றை வீட்டில் வைத்திருக்க லைசன்ஸ் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இதுதான் நடந்தது சட்டத்திற்கு விரோதமாக எந்த விஷயமும் அங்கே செய்யவில்லை. இந்த செய்தியை கேள்விப்பட்டு எனது நண்பர் எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க என்று சொல்லி சிரித்தார்.

வீடியோ வந்ததிலிருந்து பலரும் பல கருத்துக்களை கிளப்பி விடுகிறார்கள். ஆனால், வனத்துறையில் இருந்து எங்களை ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அதனால், இவையெல்லாம் தேவையில்லாத ஆணி என்று சுஜிதா குறிப்பிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ