அலாரம் ஒலித்ததும் அலறி ஓடிய திருடன்.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே.. ஷாக் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2024, 8:38 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் வேடசந்தூரைச் சேர்ந்த தமிழன் (வயது 22) என்பவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்வதற்காக கட்டிடம் கட்டி வருகிறார்.

கடந்த ஏழாம் தேதி இந்த கட்டிடத்தில் திருட வந்த இரண்டு நபர்கள் சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் தலை தெறிக்க தப்பி ஓடி விட்டனர். அதன் சிசிடிவி காட்சி வைரலானது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3:19 மணியளவில் ஒரு மர்ம நபர் கையில் ரம்பத்துடன் செட்டின் பூட்டை அறுக்க வந்த பொழுது சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்ட சைரன் ஒலிக்க ஆரம்பித்ததால் மர்மநபர் தலைதெரிக்க தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!