ஆஹா.. புல்லரிக்குது.. இசை புயல் A.R.ரகுமானை ஒற்றை ட்வீட்டில் கொண்டாடிய தனுஷ்..!

Author: Vignesh
30 July 2024, 10:15 am

கோலிவுட்டின் எந்த பக்கம் திரும்பினாலும் பரபரப்பாக பேசப்படும் ஹாட் டாபிக்காக இருப்பது தனுஷின் ஐம்பதாவது படத்தினை தானே எழுதி, இயக்கி நடித்தும் உள்ளது குறித்து தான் பேசப்பட்டு வருகிறது. ஐம்பதாவது படமான ராயன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பினால் தனுஷ் தற்போது, கோவில் கோவிலாக சென்று வழிபாடு செய்து வருகிறார்.

மேலும், ராயன் படம் ஒருபக்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்க தயாரிப்பாளர் சங்கம் தனுஷ் மீது மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக தன்னைச் சுற்றி மகிழ்ச்சியான விஷயங்களும் பிரச்சனைகளும் சர்ச்சைகளும் நிறைந்து காணப்படுவதால் இன்றைக்கும் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக் ஆப் தி நியூசாகவே தனுஷ் மாறிவிட்டார்.

இந்த நிலையில், தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ராயன் படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும், தனது பதிவில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மலேசியாவில் நடத்திய இசை நிகழ்ச்சி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ அந்த வீடியோவில் ஏ ஆர் ரகுமான் கடந்த 1995 ஆம் ஆண்டில் இருந்து தற்போது, ரிலீசாகி உள்ள ராயன் படம் வரை தான் இசையமைத்த பாடல்களின் பின்னணி இசைகளை சேர்த்து ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

அதில், பம்பாய் படத்திலிருந்து சமீபத்தில் ரிலீசான ராயன் படம் வரை இடம்பெற்றுள்ள பின்னணி இசைகள் இடம் பெற்று இருந்தது. அந்த வீடியோவில், ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள உசுரே நீதானே நீதானே என்ற வரிகள் வரும் பொழுது திரையில் ஏ ஆர் ரகுமான் தோன்றியதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

மேலும், அந்த வீடியோவில் ராயன் படத்தின் போஸ்டரும் இடம் பெற்றிருந்தது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்த தனுஷ் நான் உசுரே நீதானே நீதானே என்ற இரண்டு வரிகள் எழுதும் போது அது இந்த அளவிற்கு ஒரு ஐகானிக் வரிகளாக மாறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

உங்களின் மெலடியால் இது சாத்தியமாகி உள்ளது உண்மையிலேயே என மெய்சிலிர்க்கின்றது ஏ ஆர் ரகுமான் சார் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு, இணையதள வாசிகள் தற்பொழுது கமெண்ட்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…