முற்றுகைப் போராட்டம்; ஆசிரியர்கள் முடிவு; வழி மறித்து கைது செய்த போலீசார்; திருச்சியில் பரபரப்பு,..

Author: Sudha
30 July 2024, 10:43 am

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் டிட்டோஜாக் சார்பாக சென்னையில் உள்ள டிபிஐ அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்நிலையில் காரில் சென்னை செல்ல முயன்ற 4பெண் ஆசிரியைகள், மற்றும் தனியார் சொகுசு பேருந்தில் சென்னை செல்ல முயன்ற இரண்டு பெண் ஆசிரியைகள் மற்றும் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் அவர்கள் சென்ற வாகனங்களை வழிமறித்து கைது செய்தனர்.

பின்னர் 6 பெண் ஆசிரியைகளை சென்னை செல்லக்கூடாது என எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக தனியார் சொகுசுப் பேருந்தை முசிறி துறையூர் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதனால் பயணிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கைக்குழந்தைகளை வைத்திருந்த பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்