அவர் கூட Compare பண்ணாதீங்க.. இது அவமானப்படுத்தும் விஷயம்.. சூப்பர்ஸ்டார் குறித்து பேசிய துல்கர் சல்மான்..!

Author: Vignesh
30 July 2024, 1:02 pm

மலையாளம், தமிழ் என பல ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வளரும் இளம் நடிகராக இருக்கக்கூடியவர் துல்கர் சல்மான். செகண்ட் ஷோ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, தீவ்ரம், பட்டம் போலே, வாயை மூடி பேசவும், ஹே சினமிக்க, ஓகே கண்மணி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை துல்கர் சல்மான் உருவாக்கி உள்ளார் என்று சொல்லலாம்.

இந்நிலையில், துல்கர் சல்மானை பாலிவுட் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டும், நடிகர் ஷாருக்கானுடன் ஒப்பிட்டு செய்திகள் பரவி வந்தனர். ஆரம்பத்தில் இதற்கு அமைதியாக இருந்த துல்கர் சல்மான் ஒரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில், இந்த வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், அவர் ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகன் என்றும், படத்திலும் சரி நிஜத்திலும் சரி ஷாருக்கானுக்கு நிகர் ஷாருக்கான் தான் என்றும் கூறியுள்ளார். மேலும், அவரை என்னுடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்தும் செயல் என்றும், ஒரே ஒரு ஷாருக்கான் தான் இருக்க முடியும் அது அவர் மட்டும்தான் என்று பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 209

    0

    0