அங்கிள் எனக்கு HELP பண்ணுங்க.. சிறுமியின் உயிரை காக்க ‘எலும்பு மஜ்ஜை தானம்’ செய்த முதல் நடிகர்..!

Author: Vignesh
30 July 2024, 1:29 pm

இந்தி சினிமாவின் நட்சத்திர நடிகர் என வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சல்மான் கான். 57 வயதாகும் அவர் இன்னுமும் ஒரு சூப்பர் ஹீரோ போன்றே பாலிவுட்டை ஆட்டி படைத்தது வருகிறார். அவரது சொத்து மதிப்பு 355 மில்லியன் உள்ளது.

இவர் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தற்போது 57 வயதாகும் சல்மான் கான் இன்னுமும் திருமணம் செய்துக்கொள்ளாமலே இருந்து வருகிறார். முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சல்மான்கான் சினிமா துறை மட்டுமின்றி சமூக நற்பணிகளிலும் அர்ப்பணிப்பு கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

salman khan

தன்னலமற்ற இவர் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார். அந்த வகையில், சில வருடங்களுக்கு முன்பு பூஜா என்ற சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு எலும்பு மஜ்ஜை தேவைப்பட்டது. சிறுமியின் உயிரை காக்க அப்போது, நடிகர் சல்மான் கான் அவரது கால்பந்து குழுவினரை நன்கொடை அளிக்க ஊக்குவித்தார்.

இருப்பினும், கடைசி நேரத்தில் குழுவினர் பின் வாங்க சல்மான் கான் அவரது சகோதரர் உடன் இணைந்து எலும்பு மஜ்ஜையை தானம் செய்தனர். அதனால், சல்மான்கான் முதன் முதலில் எலும்பு மஜ்ஜை தானம் செய்த இந்திய சினிமா நடிகர் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், அவரது தொண்டு அறக்கட்டளை பொது மக்களுக்கு ஆதரவு சுகாதாரம் மற்றும் கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. மேலும், அறக்கட்டளையின் முயற்சிகள் மூலம் அறுவை சிகிச்சைக்கு நிதியளிப்பது போன்ற உதவிகளை சல்மான்கான் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 225

    0

    0