வயநாட்டில் திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை உயர்வு : சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2024, 4:30 pm

வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது, அதைத் தொடர்ந்து அதிகாலை 4:10 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்திரி, வெள்ளரிமலை மற்றும் மேப்பாடி ஆகியவை அடங்கும். உதவி மையம் : வயநாடு நிலச்சரிவை அடுத்து, சுகாதாரத் துறை மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையைத் திறந்து, அவசரகால சுகாதார சேவைகளுக்காக 8086010833 மற்றும் 9656938689 ஆகிய இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டது. வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மானந்தவாடி உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து சுகாதார ஊழியர்களும் இரவில் சேவைக்காக வந்திருந்தனர். வயநாட்டில் சுகாதாரப் பணியாளர்களின் கூடுதல் குழுக்கள் வரவழைக்கப்படும்

கடும் நிலச்சரிவால் இதுவரை 89 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கவலைகளை தெரிவித்துள்ளார்.

கனமழையால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் கேரளா அதிரப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் வரும் வாகனங்கள் கவனமாக வரவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!