கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் நிலச்சரிவு; அச்சத்தில் மக்கள்; உடனே விரைந்த மீட்பு குழு,..!!
Author: Sudha30 July 2024, 5:00 pm
கேரளா வயநாடு பகுதியில் தொடர்மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 95 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தற்பொழுது கர்நாடகாவிலும் இதுபோன்றதொரு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்த நிலையில் இன்று ஹாசன் மாவட்டத்தில் சக்லேஸ்பர் தாலுக்காவில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் கார் லாரி, எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆகியவை சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெங்களூர்- மங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த மீட்புப் பணிகள் முடிவதற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆகும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.