தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகையான நீலிமாராணி இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது கணவர் வயதில் மூத்தவரும் பார்ப்பதற்கு மிகவும் வயதான தோற்றத்தில் இருப்பதையும் பலர் கேலி கிண்டல் செய்வதாக சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மன வருத்தத்தோடு தெரிவித்து இருந்தார் .
அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் தன்னை பற்றி கூகுளில் அதிகம் தேடப்படும் கேள்விகளுக்கும் பதில் அளித்த நீலிமா ராணி பற்றி ஒரு ஆசாமி, ” உன் புருஷனுக்கும் உனக்கும் பல வருஷம் பல வயசு வித்தியாசம் இருக்கே அவரால் உன்னை திருப்தி படுத்தவே முடியாது… காசுக்காக தானே அவரை மயக்கி கல்யாணம் பண்ண? உண்மையாகவே உன் ரெண்டு பிள்ளைகளுக்கும் இவர்தான் அப்பாவா? என மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் அவரை குறித்து கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
இதற்கு நீலிமா மிகுந்த வருத்தத்தோடு கண்கலங்கி, என்னுடைய கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதைப் பார்த்து பலரும் அவர் உங்களுக்கு தாத்தாவா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். சிலர் என் கணவர் தான் என்று தெரிந்தே தாத்தா மகள் உறவு என கிண்டலடிக்கின்றனர். ஏன் இயற்கையாக ஒரு மனுஷன் இப்படி இருக்கக் கூடாதா?
என்னுடைய கணவருக்கு டைப் பயன்படுத்தும் பழக்கமே இல்லை. அதில் அவருக்கு விருப்பமும் இல்லை. நானும் அவருக்கு பிடித்தவாறு இருக்கட்டும் என விரும்புகிறேன். ஆனால், மற்றவர்களிடம் விமர்சனம் தான் எங்களை அதிகமாக பாதிக்கிறது. இருந்தாலும் அதைப்பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை. எந்த ஒரு கருத்தை தெரிவித்தாலும் தன்னை முன் வைத்து கூறுங்கள் என மிகுந்த வருத்தத்தோடு கூறி இருக்கிறார்.
நீலிமாவின் இந்த வருத்தமான பதிலுக்கு அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அவர்கள் பேசும் விதத்திலேயே தெரியுது அவர்கள் நல்ல குடும்பத்தில் பிறக்கவில்லை என்று நீங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீங்க நீலிமா என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.