எல்லோரும் ரெடியா? “GOAT” 3-வது பாடல் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

Author:
30 July 2024, 8:14 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

Goat

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. குறிப்பாக இந்த படத்தில் முதல் இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இருந்தாலும் முன்னதாக வெளிவந்த விஜய்யின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு இந்த பாடல்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மூன்றாவது சிங்களாவது மிகச் சிறப்பாக இருக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் சமயத்தில் தற்போது வெங்கட் பிரபு அது குறித்து அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

Venkat Prabhu - Updatenews360

கோட் படத்தை மூன்றாவது பாடல் குறித்து அப்டேட் வெளியிட்டு இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு இது குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் “கோட் படத்தின் அடுத்த அப்டேட் 3வது பாடல்” என்று பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவை விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!