ஹமாஸ் இயக்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்தி படுகொலை : ஈரானில் பதற்றம்..!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2024, 11:23 am

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் போரானது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் இதுவரை பாலஸ்தீனர்களின் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39,000-த்தை கடந்தள்ளது.

மேற்கொண்டு 90,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் இன்னும் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த போது அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்கி இருக்கின்றனர்.

இதன் விளைவாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், தஹ்ரானில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த தகவலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்