தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; சொத்து விபரம் கண்டிப்பா வேணும்: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கெடு…!!
Author: Sudha31 ஜூலை 2024, 1:58 மணி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், தனது அறிக்கையை முதல் அமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல் துறையினர், மாவட்ட கலெக்டர்,உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.
இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அவகாசம் கேட்ட நிலையில், சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்டு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் அதிகாரிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
0
0