வளர்ச்சிப்பணிகள் எப்படி நடக்குது ? 11 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள்: தமிழக அரசு உத்தரவு…!!

Author: Sudha
1 August 2024, 11:08 am

தமிழக அரசு மாவட்ட வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவும் 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் முதன்மைச் செயலாளர் சி.விஜயராஜ் குமார் ஐஏஎஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ், சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயலாளர் வீரராகவ ராவ் ஐஏஎஸ், தூத்துக்குடி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னிட் ஐஏஎஸ், திண்டுக்கல் சென்னை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் எஸ். மதுமதி ஐ.ஏ.எஸ், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குக் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் கே.நந்தகுமார் ஐஏஎஸ் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் இ.சுந்தரவல்லி ஐஏஎஸ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான எம். வள்ளலார் ஐஏஎஸ், திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் ஐஏஎஸ், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுபான்மையினர் நல இயக்குநர் எம்.ஆசியா மரியம் ஐஏஎஸ், நாமக்கல் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்,மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 231

    0

    0