இரிடியத்தை ஏற்றுமதி செய்து தருவதாக ₹25 லட்சம் மோசடி : பக்கா பிளான் போட்ட கோவை தம்பதி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 1:29 pm

சென்னை எண்ணூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு அவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரையை சேர்ந்த சியாம்(எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

சியாம்(எ) ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவியான சஜிதா ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் பெறலாம் என சீனிவாசனை நம்ப வைத்துள்ளனர்.

மேலும் இரிடியத்தை சோதனை செய்வதற்காக அறிவியல் நுட்பம் தெரிந்த சேகர் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்து அதனை சோதனை செய்ய சீனிவாசனிடமிருந்து 10 லட்சங்களை மூவரும் பெற்றுள்ளனர்.

பின்னர் சியாம்(எ) ஜாய் மோகன் மூலம் வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதாக அறிமுகமான வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர்கள் சோதனை செய்யப்பட்ட இருடியத்தை உண்மையானது என்றும், அதனை வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் பலகோடி மதிப்பில் விற்றுக்கொடுப்பதாக கூறி அதற்கு முன்பணமாக சீனிவாசனிடமிருந்து மேலும் ரூபாய் 15 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.

பின்னர் அவர்களிடமிருந்து எவ்வித தகவலும் வராமல் இருக்கவே சந்தேகம் அடைந்த சீனிவாசன் விசாரித்துப் பார்த்ததில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சீனிவாசன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் சியாம்(எ) ஜாய் மோகன்(44) மற்றும் அவரது மனைவியான சஜிதா(38) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து இரிடியம்,499லட்சம் பணம்மற்றும் 77 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் குற்ற வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!