கட்டைப்பைக்குள் குழந்தை; அசால்ட்டு காட்டிய பெண்மணி:தட்டித் தூக்கிய போலீஸ்..!!

Author: Sudha
1 August 2024, 3:54 pm

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்தவர்கள் சின்னு – கோவிந்தன் தம்பதி. இவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27 -ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று 31-தேதி காலை மகப்பேறு வார்டில் இருந்த குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தைக் கடத்தலை கண்டுபிடிக்க 2 டிஎஸ்பிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் ஆண் குழந்தையை வேலூர் போலீசார் கண்டுபிடித்தனர்.

குழந்தையை வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியை சேர்ந்த ஜெயந்திமாலா என்ற பெண் கடத்திச் சென்றது தெரியவந்து.இந்த நிலையில் ஜெயந்தி மாலா குழந்தையை கடத்தி கட்டை பையில் வைத்துக்கொண்டு சாதாரணமாக எதுவும் நடக்காதது போல் துணி பையை எடுத்துக்கொண்டு செல்வது போல் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி இருக்கிறது.

ஜெயந்திமாலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பெங்களூரில் ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்த நிலையில், பெங்களூருக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் குழந்தையை மீட்டனர்.அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி கட்டைப் பையில் வைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?