நீட் தேர்வு ரத்தா? தொழில் நுட்பங்களை பயன்படுத்துங்க : உச்சநீதிமன்ற உத்தரவால் டிவிஸ்ட்!!!

Author: Sudha
2 August 2024, 1:35 pm

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீட் தேர்வு ரத்து இல்லை என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை இன்று மீண்டும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

NTA இன் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் தேர்வில் செய்ய வேண்டிய மாற்றங்களை பரிந்துரைக்கவும் முன்னாள் ISRO தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பணியை விரைவுபடுத்த பரிந்துரைத்தது.

மேலும் தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது..

நீட் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்த கற்றுக்கொள்வதற்கான திட்டங்களை உருவாக்குவது குறித்து ராதாகிருஷ்ணன் குழு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் பெஞ்ச் கூறியது.

நீட்-யுஜி தேர்வின் போது எழுந்துள்ள சிக்கல்களை மத்திய அரசு சரிசெய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் நிபுணர் குழு நீட் தேர்வின் புனிதத் தன்மையை பாதுகாக்கவும், பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்

உயர்நிலை நிபுணர் குழு போட்டித் தேர்வில் நடைபெறும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்

நீட் தேர்வு மையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்

நீட் தேர்வு போன்றவற்றை எழுதும் தேர்வர்களுக்கும், நடத்துவோருக்கும் மனநலம் மேம்படும் வகையில் கவுன்சிலிங் முறை ஏற்படுத்த வேண்டும் போன்ற பரிந்துரைகளை இன்று உச்சநீதிமன்றம் அளித்தது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 222

    0

    0