சொந்த கட்சி நிர்வாகிக்கே கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்ட தலைவர் :டிவிஸ்ட் வைத்த போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2024, 1:48 pm

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள வீரசின்னம்பட்டி சேர்ந்தவர் தனபால்( வயது 31) இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள் ஓ.பி.சி அணி செயலாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள தனபாலனை மாற்றக்கோரி கட்சி தலைமைக்கு முகநூலில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாவட்ட செயலாளரான தனபாலை வீடியோ கால் மூலம் தன்னை அவதூறாக பேசியதாகவும் மேலும் சாணார்பட்டி வடக்கு ஒன்றிய தலைவர் மணிகண்டன்( வயது 32) என்பவரும் தன்னை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தனபால் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் மேற்கண்ட மணிகண்டன் என்பவர் தனபால் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தனபாலன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டதாகவும். தன்னை அடையாளம் தெரியாத 2 நபர்களுடன் சாணார்பட்டி அருகில் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் புகார் அளித்தார்.

இதனையடுத்து இருதரப்பினரின் புகாரின் அடிப்படையில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி மேற்கண்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் தனபாலன், மணிகண்டன்,தனபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் வியாழக்கிழமை மாலை வீரசின்னம்பட்டியை சேர்ந்த
தனபால்,சில்வார்பட்டியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி மணிகண்டன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 269

    0

    0