பிரதமர் மோடி எப்படி அப்படி சொல்லலாம்? இது தற்கொலைக்கு சமம் : அமைச்சர் துரைமுருகன் வேதனை!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2024, 4:59 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது இதில் ஊராட்சி தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

இதன் பின்னர் காட்பாடி அடுத்த கரசமங்கலம் என்ற இடத்தில் ரயில்வே கேட்டில் கடவு பாதையில் மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.29.14 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல்லை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி துவங்கினார் இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன்,துணை மேயர் சுனில் உள்ளிட்ட திரளான அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்

பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில். தமிழகம் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் பேசி தீர்வு காணவில்லை 38 முறை பேசியும் சுமூக தீர்வில்லை நடுவர் மன்றம் சென்றோம் நேரடியாக பட்டேலும் , கலைஞரும்,தேவகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார்

நாங்கள் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம் மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள் பேசி தீர்க்கிறோம் என அது பிரச்சணைக்கு தீர்வாகாது தென் பென்னை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள் அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம் ஆனால் அவர்கள் இரண்டாண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்

கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது தான் இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார்

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது நாங்கள் செல்லும் என கூறியதை தன் அறிவித்தோம்.வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு குறித்து கேட்டதற்கு அதற்கென்ன செய்வது என கூறினார்

நீர்வளத்துறை கால்வாய்களை எல்லா இடங்களிலும் சீராக்கி ஒவ்வொரு ஏரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் செய்யப்பட்டுள்ளது

வயநாடு விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார் என்பது பினராயி விஜயன் படிக்கிறார் வரலாம் வெள்ளம் என சொல்லியுள்ளனர் அதில் பிரளயம் ஏற்படும் என கூறவில்லை இதில் பினராயி விஜயன் சொல்வது தான் உண்மை என கூறினார்

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 369

    0

    0