எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து முழுக்க முழுக்க தனது முயற்சியால், தனது திறமையால் மட்டுமே வளர்ந்து உச்ச நட்சத்திர நடிகராக இன்று வளர்ந்திருப்பவர் தான் சிவகார்த்திகேயன் .
இவர் திரைப்படங்களின் ஹீரோவாக வருவதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கினார். அங்கிருந்து கொண்டே தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தவராக பார்க்கப்பட்டார்.
இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன்படி 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக தடம் பதித்தார். தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ , சீமா ராஜா , வேலைக்காரன் , நம்ம வீட்டுப் பிள்ளை , டாக்டர், மாவீரன் , அயலான் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகராக இடம்பிடித்தார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது. இதை அடுத்து எஸ் கே 23 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்த பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் . சிவகார்த்திகேயன் புது படத்தில் நடிக்க இருக்கிறார்.
டாக்டர் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் கைகோர்த்து இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா கமிட் ஆகியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றிய சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் நெப்போலியன் பேசியிருப்பதாவது, தமிழ் நாட்டின் மத்திய பகுதியிலிருந்து வந்த பையன் நடிச்சு சீக்கிரமா பேமஸ் ஆகிறான் என்றால் அவனை பாராட்டணும். இப்போ சிவகார்த்திகேயன் நடிச்சு ஒரு படம் இவ்ளோ கலெக்ட் ஆகுது… டாப் 5 ஹீரோவின் படத்தை விட இவன் நடிச்ச படம் நல்லா வசூல் ஆகுதுன்னா நீங்க அதை பார்த்து பெட்டரா கொடுக்க ட்ரை பண்ணுங்க… நல்லா நடிங்க…அதை விட்டுட்டு அவனை பார்த்து பொறாமைப்படுவதோ அந்த இழிவாக பேசுவதெல்லாம் நல்லா இல்ல.. என்று நெப்போலியன் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக ஆவேசத்துடன் பேசி உள்ளார்.