படுத்த படுக்கையாக ஆஜரான செந்தில் பாலாஜி.. என்ன ஆனது? பரபரத்த நீதிமன்றம்..!
Author: Vignesh2 August 2024, 6:35 pm
புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக ஆஜர் படுத்தப்பட்டார். பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. தற்போது, செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
புழல் சிறையில், அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால், புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி முன்பாக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
படுக்கையில் இருந்தவாறு செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டதால், என்ன ஆனது என நீதிபதி கேட்டார். அதற்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைகாவலர் விளக்கம் அளித்தார். நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 52 வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.