சினிமாவில் வருவதற்கு முன் T.ராஜேந்தர் வாழ்ந்த வீடு இதுதான்… இவ்வளவு ஏழ்மையா?

Author:
2 August 2024, 6:50 pm

தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகர், இயக்குனர் ,பாடகர் ,இசை கலைஞர், அரசியல்வாதி இப்படி பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி பிரபலமான நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் தான் டி ராஜேந்தர்.

t rajendar - updatenews360

1980க்களில் தொடங்கிய இவரது திரைப்பயணம் ஒரு இயக்குனராகவும், நடிகராகவும் ,இசையமைப்பாளராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக பார்க்கப்படுகிறார் .1980ல் ஒரு தலை ராகம் திரைப்படத்தை இயக்கி ,எழுதி ,நடித்து ,இசை அமைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் . தொடர்ந்து ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள் ,நெஞ்சில் ஒரு ராகம், தங்கைக்கோர் கீதம் ,உயிருள்ளவரை உஷா ,உறவை காத்த கிளி, இப்படி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி நடித்த பெருமை பெற்றவர் தான் டி ராஜேந்திர்.

இவரது மகன் சிலம்பரசன் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தந்தை இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த சிம்பு தற்போது ஹீரோவாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர குடும்பமாக பார்க்கப்பட்டு வரும் டி ராஜேந்தரின் பூர்வீக வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .

மயிலாடுதுறை மாவட்டம் இடையலூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்த டி ராஜேந்தர் இந்த வீட்டில் தான் வாழ்ந்தார் சினிமாவில் வருவதற்கு முன்னர் அவர் இந்த வீட்டில் தான் வாழ்ந்து இன்று கார் , பங்களா என வசதி வாய்ப்புகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ஒரு சிறிய ஓட்டு வீடு மற்றும் சீட் போட்ட வீட்டில் இவ்வளவு எளிமையாக வாழ்ந்து இன்று மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கும் டி ராஜேந்திரனின் வளர்ச்சியை பார்த்து எல்லோரும் பிரம்மித்து போய்விட்டனர்., இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 274

    0

    0