ஸ்கூல் இல்லை;கூட படிச்ச ஃப்ரெண்ட்ஸ் காணோம்: குடும்பத்துடன் மாயமான 70 மாணவ மாணவிகள்: வயநாடு பயங்கரம்…!!

Author: Sudha
3 August 2024, 9:40 am

வயநாடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 250 பேரை காணவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்ட உடன் படிக்கும் நிறைய மாணவர்களைக் காணவில்லை என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சூரல்மலை பகுதிக்குப் போகவே பயமாக இருக்கிறது எனவும் தெரிவித்து உள்ளனர்.இனி அங்கு செல்லும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் சொல்லியுள்ளனர்.

இனி நாங்கள் படிக்க எங்கே போவோம் என்ன செய்வோம் என்பது புரியாமல் இருக்கிறது என சொல்லியுள்ளனர் மாணவர்கள்.

பள்ளியின் நிர்வாகி ஒரு கன்னியாஸ்திரி பேசும்போது சூரல் மலை பகுதியில் இருந்து நிறைய மாணவர்கள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வந்து சென்றனர்.அந்த மாணவர்களில் 70க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் காணாமல் போயிருப்பதாக தெரிய வருகிறது .

முண்டக்கை என்ற இடமே இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது சூரல்மலை பகுதியில் முன்பு 350 வீடுகளுக்கும் மேல் இருந்தது.இப்போது வெறும் பத்து வீடுகள் மட்டுமே இருக்கிறது எனவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரும் பேரழிவு எனவும் அவர் தெரிவித்தார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!