வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த பாட்டி மற்றும் அவரது பேத்தி, சிறுமி இருவரும் வெள்ளத்தில் அடித்து ஒரு காட்டு பகுதியில் சிக்கியுள்ளனர்.
அந்த நேரத்தில் அந்த காட்டு பகுதியில் இருந்து யானை ஒன்று வந்து அந்த பாட்டியையும் அவருடைய பேரப்பிள்ளைகளை காப்பாற்றியுள்ளது. இதுகுறித்து உயிர் பிழைத்த அந்த பெண் பேட்டியில் கூறியதாவது,”எனக்கு பேச கூட முடியவில்லை… அங்கேயும் இங்கேயும் கடல் போல் தண்ணீர் வந்தது. எங்கள் வீட்டு வார்பு (காண்கிர்ட் தலம்) விழுந்தது.
நான் சமையல் புகைக்கூண்டை பிடித்து மேலேறினேன். அப்போது என் பேரப்பிள்ளை என்னை காப்பாற்றுங்கள் என்றான். பேரனின் விரல் பிடித்து இழுத்து எடுத்து உடைந்த வார்ப்பில் இருந்து அவனை மீட்டேன். அப்போது இரண்டு நிலைகள் கொண்ட வீடு இடிந்து வந்துகொண்டிருந்தது. கஷ்டப்பட்டு மேலேறினோம். அங்கே மிக பெரிய கொம்பன் நின்று கொண்டிருந்தது என்றார்.
செய்தியாளர் உடனே யானையா? என கேட்டதற்கு… அந்த பெண், ஆமாம்…. நான் யானையிடம், “நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உயிர் பிழைத்து வருகிறோம். எங்களை பார் என்று கூறினேன். உடனே கொம்பனின் இரண்டு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதன் கால்களுக்கு நடுவே இரவு முழுக்க விடியும் வரை இருந்தோம்.
அந்த காட்டு யானை எங்களை ஒன்றும் செய்யாமல் இரவு முழுவதும் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது. மறுநாள் காலை மீட்பு படையினர் கண்ணில் பட்ட என்னையும், என் பேத்தி பேரன்களையும் உடனே மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர் என கேரள ஊடகம் முன்பாக பேட்டி கொடுத்துள்ளனர்.
அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும்போது….வன விலங்குகளுக்கும் சுக துக்கங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. எந்த உயிரினமும் மனிதர்களை எதிரிகளாய் நினைப்பதில்லை (நம்மால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வரை) என்பது உணர முடிகிறது.