“பொய் வழக்கில் திட்டமிட்டு கைது..” கரூரில் எடப்பாடி காட்டம்..!
Author: Vignesh3 August 2024, 11:03 am
கரூர்: செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதை மறைப்பதற்காக பொய் வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார் என்று கரூரில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
நில மோசடி வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுகவினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிலத்திற்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் சம்பந்தம் கிடையாது.
வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவின் அமைச்சர் (செந்தில்பாலாஜி) சிறையில் இருப்பதன் காரணத்தால், அதை மறைப்பதற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார்.