பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள்.. காட்டிக்கொடுத்த CCTV..!

Author: Vignesh
3 August 2024, 11:59 am

நத்தம் அருகே பார் கல்லாவில் இருந்த பணத்தை அபேஸ் பண்ணிய மதுவிலக்கு காவலர்கள் – சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் சில்லறை மது விற்பனை தடுப்பது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குறிச்சியில் நடைபெற்று வரும் பாரில் சோதனை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகியோர் சென்றுள்ளனர்.

அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்களை சோதனை என்ற பெயரில் விரட்டிவிட்டு முதியவர் ஒருவரிடம் அவர் டவுசர் பையில் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை காவலர் எடுத்துக் கொண்டார். பின்னர், பாரில் விற்பனை செய்து அட்டைப்பெட்டியில் வைத்திருந்த 40,000 ரூபாய் பணத்தை மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், மதுவிலக்கு காவலர் ஜேம்ஸ் ஆகியோர் எடுத்துக்கொண்டனர்.

இது குறித்த, சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரே சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோதமாக பணத்தை திருடிச்சென்ற சம்பவம் காவல்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 208

    0

    0