தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஷால் பிரமாண்ட நிறுவனமான லைக்கா நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டு இருக்கிறார். அதாவது, விஷாலின் ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் அடைத்திருக்கிறது. இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை தான் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கையெழுத்து போட்டுள்ளார் விஷால்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறிய நடிகர் விஷால் படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாக கூறியிருக்கிறார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான லைகா நிறுவனம் விஷாலின் மீது அதிரடியாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்ததை அடுத்து நடிகர் விஷால் நேரில் ஆஜராகி பதிலளித்தார்.
அப்போது இந்த ஒப்பந்தம் குறித்து கேள்வி கேட்டதற்கு… “எனக்கு இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே தெரியாது. என்னை வரவைத்து வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் என பதில் அளித்தார். இதை கேட்ட நீதிபதி…. நீங்கள் ஒன்றும் குழந்தை கிடையாது. புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஏதேனும் பேசாதீர்கள் என எச்சரித்தார்.
பின்பு தொடர்ந்து நீதிபதி கேட்ட கேள்விக்கு விஷால்… சொல்லுங்க பாஸ்… என்று பதில் அளித்து வந்தார். இதனால் கோபத்திற்கு உள்ளான நீதிபதி… இது ஒன்றும் சினிமா சூட்டிங் கிடையாது. இங்க “பாஸ்” என்றெல்லாம் கூப்பிடக்கூடாது. நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் ஆம்.. இல்லை என்று பதில் சொன்னால் போதும் என என கண்டிப்புடன் அறிவுரை கூறியிருக்கிறார். இதை அடுத்து இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக விஷாலின் எதிர்பாளர்கள் கிண்டல் அடித்து சிரித்து வருகிறார்கள்.