அமெரிக்க தனிநபர் வருமானத்தை எட்டிப்பிடிக்க இந்தியாவுக்கு இத்தனை வருஷமா?.. உலக வங்கி திடுக்கிடும் அறிக்கை..!

Author: Vignesh
3 August 2024, 6:30 pm

அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை அடைய இந்தியாவுக்கு 75 ஆண்டு ஆகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்களை கொண்ட நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகள் எழலாம். அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில், கால் பகுதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம்.

அதேநேரத்தில், சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும் ஆகும். ஒவ்வொரு நாடும் தங்களது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த துரிதமாக செயல்பட்டாலும் வெறும் 34 நடுத்தர வருவாய் பொருளாதார நாடுகள் மட்டுமே, உயர் வருவாய் நிலைக்கு மாற முடிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்