காஞ்சிபுரம் கோவிலில் திருட்டு: உற்சவர் சிலைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

Author: Sudha
4 August 2024, 10:40 am

கோவில்களின் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு கச்சி அநேக தங்காவதீஸ்வரர் திருக்கோவில்.1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. தேவாரம் பாடல் பெற்ற தலம் இது.

இன்று காலை அநேக தங்காவதீஸ்வரர் கோவிலில் பூட்டை உடைத்து உற்சவர் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்த சுவாமி சிலைகளை காணாமல் திடுக்கிட்டனர்.ஒன்றரை அடி உயரமுள்ள சிவன் மற்றும் பார்வதி சிலைகள் திருடு போயிருந்தன.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் 20 கிலோ எடையுள்ள செம்பு குடம், பித்தளை பாத்திரங்களையும் காணவில்லை என தெரிய வந்தது. மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், சுவாமி சிலைகளை திருடி, உண்டியலை உடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 434

    0

    0