செல்பி மோகத்தால் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளம்பெண் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2024, 3:17 pm

புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண் சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

ஆனால் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டதால் அருகிலிருந்த போர்ன் காட் என்ற இடத்தில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப்படையினர் கயிற்றை பயன்படுத்தி கீழே இறங்கி அந்த இளம் பெண்ணை மீட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 299

    0

    0