முதல்வரின் கான்வாய் போன நேரம்: “குழந்தை போச்சே” காவலரின் செய்கையால் பலியான பிஞ்சு; கதறிய பெற்றோர்….!!

Author: Sudha
5 August 2024, 10:02 am

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சேகர் இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணிக்கு மனைவி ஷாலினி, பேரன் அலோக்நாத் தர்ஷன்(5) உடன், மெரினா கடற்கரை அருகே காமராஜர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே, முதல்வர் ஸ்டாலின் கான்வாய் வாகனம், கருணாநிதியின் நினைவிடம் நோக்கி சென்றுள்ளது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் படை கான்ஸ்டபிள் மகேந்திரன் வாகனங்களை ஓரமாக செல்லுமாறு சைகை செய்து உள்ளார்.சேகர் ஓட்டி வந்த ஆட்டோவை வழி மறித்துள்ளார்.அந்த சமயத்தில் சேகர் ஓட்டி வந்த ஆட்டோ மீது, கார் ஒன்று மோதியது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, கான்ஸ்டபிள் மகேந்திரன் மீது மோதி கவிழ்ந்தது. இதில், சேகர், ஷாலினி, பேரன் அலோக்நாத் தர்ஷன் மற்றும் கான்ஸ்டபிள் மகேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த தருணத்தில், முதல்வர் கான்வாய் வாகனம் அந்த இடத்திற்கு வந்துள்ளது. விபத்தை பார்த்த முதல்வர்,காரில் இருந்து இறங்கி, காயமடைந்தவர்களை போலீசார் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவர்களை மருத்துவனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

இதில், சிறுவன் அலோக்நாத் தர்ஷன் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடியதால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

காயமடைந்த சேகர், ஷாலினி மற்றும் கான்ஸ்டபிள் மகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

  • kamal haasan not giving handshake to writer charu niveditha பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே