46 நாட்களில் 41 அதிகாரிகள் இடமாற்றம்.. திமுகவை வறுத்தெடுக்கும் ஆர்.பி உதயக்குமார்..!

Author: Vignesh
5 August 2024, 2:42 pm

மதுரை: கள்ளக்குறிச்சியில் ஜூன் 19 தேதி கள்ளச்சாராயம் அருந்தி 225 பேர் பாதிக்கப்பட்ட நிலையிலே 64 பேர்களுக்கு மேலே பலியானார்கள். இந்த கள்ளச்சராயத்திற்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. ஆகவே, காவல்துறையை தன் கைவசம் வைத்துள்ள முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து இந்த தமிழ்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.

ஆனால், கள்ளச்சாரத்திற்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பதிலே காட்டிய அலட்சியமே காரணம் என்று அந்தப் பிரச்சினையை அரசு இன்றைக்கு திசை திருப்புகிற நிலையிலே செய்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய வழிகாட்டுதலை வழங்கினால் தான் அதை செயல்படுத்தும் காவல்துறை முழுமையாக ஈடுபட முடியும் .

சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் இரண்டரை மணி நேரம் காவல்துறை மானிய கோரிக்கையில் எடுத்துரைத்தார். ஆனால், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் இந்த கொலை சம்பவத்திற்கு அரசு பொறுப்பு ஏற்க முடியாது என்று ஒரு பெரிய தத்துவத்தை, ஒரு புதிய இலக்கணத்தை அவர் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்.

சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு அரசு பொறுப்பு ஏற்கவில்லை என்று சொன்னால், ஆண்டியா பொறுப்பு ஏற்கமுடியும். ஆகவே, அவர் எந்த அர்த்தத்தில் இதை கூறினார் என்று தெரியவில்லை. நேற்று கூட காவல் துறையில் பணிபுரிந்த 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் இடமாற்றம் செய்யபட்டது. இந்த 46 நாட்களிலே 41 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்திருக்கிறார்கள். அதிகாரத்தை வைத்து பணியிடம் மாற்றம் செய்வது இது ஒன்றும் பெரிய சாதனையாக பார்த்துக் கொள்ளவில்லை.

அதிகாரத்தை மக்கள் உங்கள் கையிலே கொடுத்திருப்பது பணியிட மாற்றம் செய்வதற்கு மட்டுமல்ல, 8 கோடி ஏழை எளிய சாமானிய தமிழர்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும் அதுதான் உங்களுக்கு முழு பொறுப்பு ஆனால், அமைச்சர் அரசு பொறுப்பு ஏற்காது என்று பேசுகிறார். எதன் அடிப்படையில் பேசுகிறார் காவல்துறை பொறுப்பு ஏற்கவில்லை என்று சொன்னால், ரௌடிகள், கூலிப்படைகள் இன்றைக்கு சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நெஞ்சம் உறைந்து போய் இருக்கிறது. அதிர்ச்சியிலே, மக்கள் உறைந்து போய் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிற போது மக்கள் விரும்புவது பணியிட மாற்றம் அல்ல இந்த மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு தவறிய ஆட்சி மாற்றம் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே தவிர ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரியின் பணியிட மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

எடப்பாடியார் தனது எக்ஸ் தளத்தில் கூட ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் நாளும் கொலைச் சம்பவம் நடக்காத நாள் இல்லை என்று கூறியுள்ளார் கொலை போன்ற சம்பவங்களால் இன்றைக்கு எட்டு கோடி மக்களின் ரத்தம் உறைந்துள்ளது

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தும்மினாலும் கூட எடப்பாடியார் அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, எது நடந்தாலும் அதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடியார் என்று அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்து குற்றம் சுமத்திய முத்துவேல் கருணாநிதி அவர்களே,

இன்றைக்கு கள்ளச்சாராயம் மரணம் தொடர் மரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முன் வருவீர்களா? கொலை சம்பவங்கள் இன்றைக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதற்கு நீங்கள் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முன்வருவீர்களா? பல்லாயிரம் கோடி இன்றைக்கு போதை பொருள் நடமாட்டமும் இதற்கு இளைய சமுதாயத்தில் உள்ள எதிர்காலத்தை கேள்விக்குறியாகி இருக்கிறது அதற்கு நீங்கள் பொறுப்பேற்று ராஜினாமா முன்வருவீர்களாகளா? என்று பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் 8 கோடி மக்கள் இன்றைக்கு எதிரொலிக்கிற அந்த கோரிக்கைகள் உங்கள் காதுகள் கவனத்திற்கு வரவில்லையா?

ஆணவத்தினுடைய நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிற நீங்கள், வெற்றி மயக்கத்திலே இருக்கிற நீங்கள், மக்களின் தேவைகளை,பணிநிலைகளை நீங்கள் மறந்து விட்டீர்களா என்பதுதான் இந்த மக்களுடைய கேள்வியாக இருக்கிறது

எடப்பாடியார் இந்த மக்கள் படுகிற இன்னல்கள், துயரங்கள், துன்பங்கள் வேதனைகளை எல்லாம் இன்றைக்கு அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து கொண்டே இருக்கிறாரே? ஆனால் அரசுக்கு கேட்க மனமில்லை

அரசியல் கட்சி தலைவர்கள் உயிர்களுக்கே அச்சுறுத்தல் இருக்கிறதே? அப்படியானால் சாமானிய மக்களின் நிலை என்ன?
8 கோடி தமிழ் மக்களின் எதிர்காலம் இன்னைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது, அவர்களை பாதுகாப்பேன் என்று நீங்கள் வாக்கு அளித்திருக்கிறீர்களே ஆகவே கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலே அவர்களை பாதுகாப்பதற்கு முதலமைச்சர் முன் வரவில்லை என்று கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் கையிலே இருக்கிற அதிகாரத்தை வைத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்குகிற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், மக்களுக்கு சேவை செய்கிற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் அதை விடுத்து அதிகாரத்தை பயன்படுத்தி நீங்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது உங்களை நீங்களே ஆறுதல் சொல்வதற்கான காரணங்களை தவிர இந்த நடவடிக்கையால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை

ஆகவே இயலாமையின் அடையாளமாக இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சாமானியன் குரலாக அரசின் கவனத்திற்கு எடுத்து வைக்கிறேன் என கூறினார்

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 232

    0

    0