அந்த தாத்தா ‘Bad Touch’ பண்றாரு.. இருவேறு சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்..!

Author: Vignesh
5 August 2024, 7:09 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருவேறு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுமிகளின் தாத்தா இருவரை குளச்சல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் முரளி 62-வயது கூலி தொழிலாளியான இவர் மகள் வழி பேரக்குழந்தையான 12-வயது சிறுமியிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகரளித்துள்ளனர்.

இதேப்போல், புதுக்கடை அருகே உள்ள தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 67-வயதான மீனவர் ஜாண் என்பவர் தனது 10- வயது பேரக்குழந்தையான சிறுமியிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்தும் சிறுமியின் பெற்றோர் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

இரு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குளச்சல் மகளிர் போலீசார் முரளி மற்றும் ஜாண் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?