“வயநாடு மக்களை மீட்க உதவுவீர்” .. சேமித்து வைத்த பணத்தை நிவாரணத்திற்கு வழங்கிய மாணவி..!

Author: Vignesh
5 ஆகஸ்ட் 2024, 5:51 மணி
Quick Share

தின்பண்டத்திற்காக சேமித்து வைத்த பணத்தை வயநாடு நிலச்சரிவிற்கு பள்ளி மாணவி வழங்கி உள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவி்ன் காரணமாக 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் மதுரை திருநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துப்பாண்டி – கார்த்திகா தம்பதியினரின் மகளான ஶ்ரீ ஜோதிகா என்பவர் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், மாணவி ஶ்ரீ ஜோதிகா தின்பண்டத்திற்காக தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வயநாடு நிலச்சரிவில் பாதிக்கபட்ட மக்களுக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக மாணவி ஶ்ரீஜோதிகா கூறுகையில்,” தொலைக்காட்சியின் வாயிலாக வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. தின்பண்டத்திற்காக சேமித்து வைத்த பணத்தை மாவட்ட ஆட்சியர் மூலமாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என வந்துள்ளேன்” என்றார்.

  • Vanathi தமிழிசை மீது தரம்தாழ்ந்த விமர்சனம்.. திருமா மன்னிப்பு கேட்கணும் : வானதி சீனிவாசன் DEMAND!
  • Views: - 227

    0

    0