ரெண்டு பசங்களும் பாவம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த மாதிரி டைப்; தனுஷ் ஓபன் டாக்..!
Author: Vignesh6 August 2024, 2:01 pm
ராயன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார் அவரே இயக்கிய இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேசமயம் வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக, அவர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனுஷ் கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, அனேகன் பட சமயத்தில் தனுஷ் நடித்த பேட்டியில், எனது இரண்டு பசங்களும் என்னை போல் தான் உருவத்தில் இருக்கிறார்கள் பாவம்.
யாத்திரா குணத்தில் என்னைப் போலவே இருக்கிறார். உணவில் மட்டும் அவர் அசைவம் நான் சைவம். மற்றபடி பெரும்பாலும் என்னைப் போன்ற குணம் தான். லிங்கா தான் அவங்க அம்மா மாதிரி, அவங்க அம்மா ரொம்பவே உஷார் ஏமாத்தவே முடியாது. அதேபோல்தான், லிங்காவும் இருந்து வருகிறார். அவர் தான் வளர்ந்த பிறகு என்னை செய்வார் போல என்று தனுஷ் பேசியிருந்தார்.