கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லிட்டு.. விஜய் ஆண்டனியையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் கலாய்த்த ப்ளூ சட்டை..!

Author: Vignesh
6 August 2024, 2:40 pm

கடந்த வாரம் வெளியான படத்திலே அதிக நட்சத்திர பட்டாளம் கொண்ட படமாக இருப்பது விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் படம் தான். மற்ற படங்களை விட சற்று கூடுதல் வசூல் செய்தாலும், அந்த படத்தின் மீதான சர்ச்சை படத்திற்கு பெரும் பின்னடைவைதான் ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, விஜய் ஆண்டனிக்கு எடிட்டிங் தெரியும் என்றும் அவர் தான் சலீம் படத்தின் ஒரு நிமிட காட்சியை சொருகி இருப்பார் என ப்ளூ சட்டை மாறன் சந்தேகம் கிளப்பியிருந்தார். இந்நிலையில், தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பது போல விஜய் ஆண்டனி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

மேலும், அந்த ஒரு நிமிட காட்சியை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். படத்தை ஒழுங்கா எடுக்க சொன்னா ஹார்ட்டிஸ்க் தொலைஞ்சு போச்சு, எனக்கு தெரியாம ஒரு நிமிஷத்தை சேர்த்துட்டாங்கன்னு கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ல வேண்டியது என மீம் போட்டு ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் கலாய்த்துள்ளார்.

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?