அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி: கண்டிப்பாக இப்போது”வாய்ப்பில்லை” மறுத்து விட்ட மத்திய அரசு…!!

Author: Sudha
7 August 2024, 3:45 pm

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 18 மாதங்களாக டிஏ மற்றும் டிஆர் தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது.

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய அகவிலைப்படியை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என ஊழியர் சங்க செயலாளர் சிவகோபால் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 18 மாத டிஏ அல்லது டிஆர் தொகை விரைந்து கிடைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர்களான ஜாவேத் அலி கான் மற்றும் ராம்ஜி லால் சர்மா ஆகியோர் “கொரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் டிஏ-டிஆர் தொகை வழங்கப்படவில்லை. தற்போது இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. அப்படி இருந்தும் ஏன் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத நிலுவை டிஏ வழங்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “கொரோனா தொற்று காரணமாக நிதி நிலைமை நன்றாக இல்லை” என்று கூறினார்.

இதன் மூலம் NCJCM உட்பட பல ஊழியர் அமைப்புகள் கோரிக்கை எழுப்பியிருந்தாலும், தற்போது 18 மாதங்களுக்கான DA நிலுவைத் தொகையை வழங்க முடியாது என்று மறைமுகமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 945

    0

    0