வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி? போர்க்கொடி தூக்கிய I.N.D.I.A கூட்டணி : வெடித்தது போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 ஆகஸ்ட் 2024, 5:56 மணி
IDNIA
Quick Share

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் இந்திய வீராங்கனை 50 கிலோ எடைப்பிரிவில் விளையாடி வந்தார்.

நேற்றிரவு அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், உடல் எடை அதிகரித்துள்ளதால் இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

50 கிலோவை விட 100 கிராம் எடை கூட இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக பாரீஸ் ஒலிம்பிக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த நபர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்திய அரசு இந்த முடிவுக்கு எதிராக போராட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.தகுதி நீக்கத்திற்கு பின்னால் சதி இருப்பதாக முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு நீதி கேட்டு இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மகார் த்வாரில் நின்றபடி குரல் எழுப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் அவைக்குள்ளும் எதிரொலித்தது. வினேஷ் போகத் காலிறுதியில் 82 முறை தோல்வியடையாத வீராங்கனையை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Divorce விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
  • Views: - 537

    0

    0