மனைவியை கொலை செய்து ஒன்னும் தெரியாத அப்பாவி போல அமர்ந்திருந்த கணவன்.. போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 6:54 pm

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூரிய சந்திரா. அவருடைய மனைவி லட்சுமி. தம்பதிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை சூரிய சந்திர கடுமையாக தாக்கினார்.

இதனால் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்த மனைவி லட்சுமியை பிடித்த சூரிய சந்திரா அவரை கத்தியால் வெட்டி பலர் கண் முன் பட்டப் பகலில் படுகொலை செய்தார்.

பின்னர் அதே கத்தியை தன்னுடைய மோட்டார் சைக்கிளின் முன்புறம் வைத்து காவல் நிலையத்திற்கு செல்வது போல் புறப்பட்ட அவர் பின்னர் வீட்டுக்குள் சென்று வெளியில் வந்து அந்த கத்தியை எடுத்து அருகில் வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் அசால்டாக உட்கார்ந்து இருந்தார்.

கொலை சம்பவம் பற்றி கிராம பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் சூரிய சந்திராவை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

லட்சுமி உடல் பிரேத பரிசோதனைக்காக ஏலூரூ அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 243

    0

    0