நான் தோற்று விட்டேன்: இனியும் போராட வலிமை இல்லை: விடை பெறுகிறேன்.. ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்…!!

Author: Sudha
8 August 2024, 8:28 am

பாரிஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 33 வது ஒலிம்பிக் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வெல்வார் என இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்த்திருந்த நிலையில் மகளிர் மல்யுத்தம், 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், போட்டியன்று காலைநிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100கிராம் கூடியதால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய நம்பிக்கை அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று பதிவிட்டுள்ளார்,அவருடைய இந்த ஓய்வு அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…