மனைவியை ஆபாசமாக படம்பிடித்து பணம் வசூலித்த கொடூர கணவன்.. திருமணமான 4 மாதத்தில் அதிர்ச்சி..!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 10:37 am

சேலம் உடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தஇளம் பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

ஆடி மாதத்தில் புது பெண் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பெண்ணின் உறவினர் ஒருவர் புதுப்பெண்ணின் தொலைபேசியை பார்த்த போது ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது.

இது குறித்து பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் கேட்டபோது பெண் அளித்த தகவல் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்ணின் கணவர் தமிழ்ச்செல்வன் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) வெளியிட்டு பல ஆண்களிடம் விலை பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து உறவினர்களுக்கு தெரிய வந்ததை எடுத்து அப்பெண் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் தமிழ்ச்செல்வன், மற்றும் பாலியல் தொந்தரவு கொடுத்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த நடராஜ் (42) ஆகிய இருவர் மீது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், தகவல் தொழிற்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த மொபைல் போனை பறிமுதல் அதில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்தால் இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மனைவியை பார்க்கச் சென்ற போது தன்னை தாக்கியதாக தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார், பெண்ணின் பெற்றோர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 424

    0

    0