திருமணமான பட்டதாரி பெண்ணுடன் இளம் விவசாயிக்கு முளைத்த முறை தவறிய காதல்… மோட்டார் ரூமுக்குள் நடந்த ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2024, 1:29 pm

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ள காட்டுப்புத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமலை. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (29) ஐடிஐ படித்து விட்டு விவசாய வேலை செய்து வந்துள்ளார். திருமணம் ஆகவில்லை.

காட்டுப்புத்தூர் அடுத்த சீத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (23). இவர்களுக்கு திருமணமாகி 6வருடங்கள் ஆகிறது 5வயதில் மகள் உள்ளார்.

பி.ஏபட்டதாரியான கீர்த்தனா தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், கீர்த்தனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் கள்ள காதலாக மாறி உள்ளது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிந்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணமூர்த்தி கீர்த்தனா இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் ரைஸ் மில் அருகில் உள்ள மோட்டார் கொட்டகையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கு காரணம் கள்ளக்காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu