‘ஸ்பார்க்’ டேக் ஓகே, இதை போஸ்ட் பண்ணு.. என்னய்யா பண்ணி வெச்சிருக்கீங்க..!
Author: Vignesh8 August 2024, 5:39 pm
வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவான ‘தி கோட்’ படத்தின் பாடலான ‘ஸ்பார்க்’, சில தினங்களுக்கு முன்பு வெளியானது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கங்கை அமரன் எழுதிய அந்த பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. நெட்டிசன்கள் பலர் பாடலைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
ஆனாலும், பல யுவன் ரசிகர்கள் பாடல் சூப்பர் தான்பா.. சில ‘ஹேட்டர்ஸ்’ வேண்டுமென்றே பாடலைப் பற்றி வதந்தி பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் ‘ஸ்பார்க்’ பாடலை வைத்து ‘ரீல்ஸ்’ வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார் யுவன்.“டேக் ஓகே, இதை போஸ்ட் பண்ணு என வெங்கட்பிரபு சொன்னார்,” என்றும் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பாடல் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் வெங்கட் பிரபுவும், யுவனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவர் கூல் ஆக இருக்கிறார் என்பது தெரிகிறது.