கடவுளை வைத்து அரசியல் செய்வதா?திமுக பாஜக இப்படித்தான்…கொந்தளித்த சீமான்..!!
Author: Sudha9 August 2024, 11:00 am
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இங்கு கடவுளை வைத்து அரசியல் நடக்கிறது.தைப்பூசத்திற்கு முன்பெல்லாம் பொது விடுமுறை விடவில்லை. நான் பேசிய பிறகு, என் முயற்சியால்தான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தைப்பூசத்திற்கு விடுமுறை விடப்பட்டது. திமுக வினர் ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் அல்லாமல் இப்போது முருகன் மாநாடு நடத்துகின்றனர்.
இப்போது திமுக வுக்கு திடீரென முருகன் மீது பக்தி வந்துள்ளது.தேர்தல் வரும்போது மட்டும் இவர்களுக்கு முருகன் மீது பக்தி, பாஜக வுக்கு ராமர் மீது பக்தி. இப்போது ஏன் பாஜக வினர் ராமர் பற்றி பேசுவதில்லை?
பாஜக எப்போது முருகர் பக்கம் வந்துள்ளது? இங்க வந்தா முருகர்,அங்க போனா ஐயப்பன்.. ஒடிசா போனா பூரி ஜெகன்னாதர்.
திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் ஆட்சி தான் என அமைச்சர் ரகுபதி பேசுகிறார். ராமர் ஆட்சி இவ்வளவு கேவலமாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்களா? சாராயத்தால் மக்கள் இறப்பது, தினமும் கொலைகள் நடைபெறுவது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வன்புணர்வு செய்து கொலை செய்வது எல்லாம் இந்த ஆட்சியில் நடைபெறுகிறது. இது கடவுளின் ஆட்சியா? கடவுளையும் கட்சிகளுக்கான அரசியலாக பார்க்கின்றனர் இவ்வாறு அவர் பேசினார்.