கருணாநிதியாலே முடியல.. CM ஸ்டாலின் எங்களுக்கு ஜூஜூபி : கொக்கரிக்கும் செல்லூர் ராஜு!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 11:52 am

மதுரை மாநகர் அதிமுக கழகம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் K ராஜு தலைமையில் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு பகுதியில் நடைபெற்றது.

தொடர்ந்து மேடையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது;
திமுக ஆட்சி இன்றைக்கு நடக்கிறது. திமுக ஒருமுறை ஆட்சி செய்தால் மற்றொரு முறை ஆட்சிக்கு வரமாட்டார்கள்.

கருணாநிதி யாலே தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாத போது ஸ்டாலின் ஆல் முடியாது.விலைவாசி ஏற்றம், போதை புழக்கம் அதிகரித்து உள்ளதை கட்டுப்படுத்த முடியவில்லை, குறிப்பாக திமுக கட்சிக்காரர்களை அடக்கவே முடியாமல் திணறுவதாக தெரிவித்தார், மேலும் தான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறினார் என்ன ஆனது.

தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்வதாக திமுக அரசு சொன்னாலும் கட்சிக்காரர்களை சமாளிக்க முடியாமல் சிகிச்சை பெறவை அமெரிக்கா செல்கிறார்.

முதலீட்டை ஈர்த்தது குறித்து வெள்ளை அறிக்கை கொடுத்துள்ளாராகளா..?10 லட்ச கோடி ஈர்த்து உள்ளார்கள் என்று சொல்லி வருகிறார்கள் அதன் விவரங்கள் இதுவரை கொடுக்கவில்லை.

அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி திணறுகின்றனர். எனவேதான் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் திமுகவிற்கு நல்ல பாடம் புகட்டி எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.

ஏழை மக்களின் கற்பக விருச்சம் அதிமுக தொண்டலுமும் முதல்வர் ஆகலாம். உரிமை சீட்டு வார்டு செயலாளர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்க வேண்டும், தவறினால் தண்டிக்க படுவார்கள்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!