சினிமா பாணியில் சேசிங் அண்ட் கேட்சிங்…போலீசார் காட்டிய அதிரடி ஸ்டண்ட்: வைரலான வீடியோ…!!

Author: Sudha
9 August 2024, 1:03 pm

32 வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் திருடனை திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு துரத்திச் சென்று காவல்துறை பிடித்த காட்சி சிசிடிவியில் சிக்கியது.

ஒரு அதிரடி திரைப்பட காட்சியை நினைவூட்டும் வகையில் இது அமைந்தது.பெங்களூருவில் 50 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 32க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒருவரை தனது உயிரைப் பணயம் வைத்து, பெங்களுரு போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தின் முன் பாய்ந்து பிடித்தார்.ஆகஸ்ட் 6-ம் தேதி பெங்களூரு சதாசிவ நகரில் நெரிசல் மிகுந்த சந்திப்பில் இந்த சம்பவம் நடந்தது.

துமகுரு மாவட்டத்தில் உள்ள கொரடகெரே காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரியும் தோட்டா லிங்கய்யா என்ற போலீஸ் கான்ஸ்டபிள், குற்றவாளியான மஞ்சேஷ் என்கிற ஹோட்டே மஞ்சாவை தேடி வந்தார்.

32 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்த குற்றவாளி கான்ஸ்டபிள் பிடித்த பின்னும் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றார். இந்நிலையில் கான்ஸ்டபிள் குற்றம் சாட்டப்பட்டவரின் காலை சினிமா பாணியில் இறுக்கமாக பிடித்துள்ளார். சுமார் 20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கான்ஸ்டபிள் தொட்ட லிங்கய்யா, இறுதியில் அவரைப் பிடிப்பதில் வெற்றி பெற்றார். உயர் போலீஸ் அதிகாரிகள் கான்ஸ்டபிளின் துணிச்சலை பாராட்டினர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 225

    0

    0